இரண்டு கட்டிடங்களை சிறைச்சாலைகளாக மாற்ற தீர்மானம் !


அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு கட்டிடங்களை சிறைச்சாலைகளாக மாற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தற்போது 32 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் சிறைச்சாலையில் உள்ளனர். 


எனினும், 13,000 கைதிகளுக்கு போதுமான இட வசதி மட்டுமே சிறைச்சாலைகளில் காணப்படுவதாகவும் ஹெந்தலையிலுள்ள தொழுநோயாளர் வைத்தியசாலையின் சில கட்டிடங்களும், மட்டக்களப்பில் அமைந்துள்ள பழைய வைத்தியசாலை கட்டிடமும் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.