அந்தியகால சேவையாளர் மீது தாக்குதல்!

 


கஹதுடுவ, தியகம பிரதேசத்தில் உள்ள அந்தியகால சேவை நிறுவனத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்த அந்தியகால சேவையாளரை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர்.

வை.ஜி. நிலந்த என்ற 24 வயதுடையவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

இவர் குறித்த நிறுவனத்தில் இருந்து சடலம் ஒன்றை அடக்கம் செய்வதற்காக பெட்டியை தயாரித்துக்கொண்டிருக்கும் போது சம்பவ இடத்துக்கு 5 இனந்தெரியாத நபர்கள் வந்துள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் அங்கிருந்த நிலந்தவின் மார்பிலும் வயிற்றிலும் கண் பகுதிகளிலும்  தாக்கி காயப்படுத்தியுள்ளார். 

காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் தரையில் வீழ்ந்த நிலையில் இருக்கும்போது நிறுவன பொறுப்பாளர், காயமடைந்தவரை ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.