பிரம்மாண்ட பட்ஜெட்டில் வரலாற்று படம்!


சூர்யா தற்போது கங்குவா படத்தில் பிசியாக இருந்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தின் ஷூட்டிங்கை சில வாரங்களுக்கு முன்பு தான் சூர்யா நிறைவு செய்திருந்தார்.

அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் தான் சூர்யா நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கு புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் வாடிவாசல் படத்தையும் சூர்யா விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவின் மற்றொரு படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹிந்தியில் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் சூர்யா மகாபாரத கதையை மையப்படுத்திய படத்தில் நடிக்க இருக்கிறார். அதில் அவர் கர்ணன் ரோலில் தான் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு சூர்யாவின் ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த வரலாற்று படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் அது நிறைவடைந்ததும் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.