டேவிட் வார்னர் அவர்களுக்கு டெல்லி அணிநிர்வூகம் ளுதிய வாய்ப்பு வழங்கல்!


டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்த சில நிமிடங்களில் டெல்லி அணி நிர்வாகம் அவருக்கு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் ஐஎல்டி20 லீக் தொடரில் துபாய் கேப்பிடல்ஸ் என்ற அணியை வாங்கியுள்ளது. இந்த அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐஎல்ட்20 லீக் தொடரில் துபாய் கேப்பிடல்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது.


இந்த நிலையில் நடப்பாண்டுக்கான ஐஎல்டி20 சீசன் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக டேவிட் வார்னர் அமைந்தார். இதனால் டெல்லி அணியின் முடிவு அந்த அணிக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.