ஐ.நா. வை கை கழுவ முனையும் இலங்கை!


மயிலத்தமடு மாதவனை கால்நடைப் பண்ணையாளர்கள் நூறு நாட்களை கடந்து போராடுகின்றனர். ஆனால், அவர்களின் போராட்டம் சம்பந்தமாக எந்தவிதமான கரிசனைகளும் அரசாங்கத்துக்கு கிடையாது. இவ்வாறு பல விடயங்களை அடுக்கியவாறு செல்ல முடியும். 


இவ்வாறானதொரு சூழலில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனக்கு காணப்படுகின்ற அழுத்தங்களை களைவதற்கே சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த முயற்சிக்கு அமெரிக்கா பிரித்தானியா உட்பட அதன் பங்காளி நாடுகள் இடமளிப்பதானது, சர்வதேசத்தினை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் நட்டாற்றில் விடும் செயற்பாடாகவே மாறும். 

ஆகவே, இலங்கை அரசாங்கம் ஐ.நாவை கழுவுவதற்கு முயற்சிக்கும் செயற்பாடுகளை ஆழமாக அலசி ஆராய்ந்து, சர்வதேசம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேநேரம், புலத்திலும் நிலத்திலும் உள்ள தரப்புக்களும் கூட்டிணைந்த பணித்திட்டங்களை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.