தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்!
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருடன் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடும் நிகழ்விலும் அவர் பங்குபற்றவுள்ளதாகவும்
வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை