சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட 10 பேர் காணாமல்போயுள்ளனர்!


 நாட்டில் கடந்த இரு நாட்களில் இரண்டு வயது சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட 10 பேர் காணாமல்போயுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காணாமல்போன இரண்டு வயது சிறுமி வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்தவராவார். மேற்படி சிறுமியும், முப்பது வயதுடைய அவரது தாயாரும் கடந்த 9ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளனர் என்று பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. 

இதேவேளை, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை நேற்று முதல் காணவில்லை என உறவினர்கள் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்தோடு, வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபர், மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண், முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவர், தெகிவளையைச் சேர்ந்த 31 வயதுடைய பெண், தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரும் காணாமல்போயுள்ளனர்.

மேலும், மெதகம பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரும் காணாமல்போயுள்ளதுடன், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.