பணம் சேர பணத்தை வைக்கும் முறை!!

 


இன்றைய சூழலில் அனைவருக்கும் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றும் அந்த பணத்தை அதிகமாக சேமிக்க வேண்டும் என்பதும் தான் மிகப்பெரிய குறிக்கோளாக இருக்கிறது. இந்த பணத்தை நாம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் எனில் அதிகமாக உழைக்க வேண்டும் சம்பாதித்து வரும் பணத்தை நல்ல முறையில் சேமிக்க வேண்டும்.

 இவையெல்லாம் சரிவர நாம் செய்ய நமக்கு நம்முடைய உழைப்புடன் சேர்த்து தெய்வ கடாட்ஷமும் நிச்சயம் தேவை. அது மட்டும் இன்றி பணம் நம்மிடம் தங்குவதற்கான பண ஈர்ப்பு தன்மையும் வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நம்முடைய உழைப்பிற்கேற்ற வருமானம் வந்து பணம் நம் கையில் தங்கி பெருகவும் செய்யும். 

இப்படி பணவரவு அதிகரிக்கவும் வரும் பணத்தை நாம் பெருக்கிக் கொள்ளவும் பல சூட்சமங்கள் இருக்கிறது. இவையெல்லாம் செய்தாலும் கூட பணத்தை நாம் கையாளும் முறை என்று ஒன்று இருக்கிறது. 

இவைகளைப் பற்றி தான்  குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். 

பணம் தாராளமாக புழங்க 

பணம் கையில் தாராளமாக புழங்க வேண்டும் என்று நினைப்பவர்கள். 

முதலில் பணத்தை சரியான முறையில் கையாள வேண்டும். பணத்தை வாங்கும் போதும் பணத்தை வைக்கும் போதும் அதற்கான முறைப்படி வாங்கி வைக்க வேண்டும். அப்படி செய்வதோடு சில இடங்களில் பணம் வைப்பதால் நம்மிடம் பணவரவு அடியோடு தடைப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

 அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம். முதலில் பணத்தை எண்ணுவதும் வாங்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம். பணத்தை நம் கையில் இருந்து மற்றொருவர் கைக்கு கொடுக்கும் போது நோட்டில் உள்ள தலைப்பகுதி நம்முடைய கட்டைவிரலில் பட வேண்டும் அதாவது நோட்டில் சிங்கம் பதித்திருக்கும் அல்லவா அது தான் தலைப்பகுதி. அந்த பகுதியில் நம்முடைய கட்டை விரல் பட வேண்டும் அப்படி தான் பணத்தை கொடுக்க வேண்டும். 

அதே போல் ஒருவர் பணத்தை கொடுக்கும் போது அப்படி கொடுக்க வேண்டும் அல்லது நாம் வாங்கிய உடனே பணத்தை நம் கையில் அப்படி வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல் சிலர் பணத்தை பர்சில் நான்கு ஆறு மடிப்பாக மடித்து சுருட்டி வைப்பார்கள் அப்படியெல்லாம் வைக்கக் கூடாது.

 பணத்தை மடிக்காமல் அப்படியே வைக்கலாம் அல்லது ஒரே ஒரு மடிப்பு மட்டும் மடிக்கலாம் அதற்கு மேல் பணத்தை மடிக்கக் கூடாது. இன்னும் சிலர் செய்யும் பெரிய தவறு பணத்தை பெண்கள் தங்களுடைய மார்பு பகுதியில் வைப்பதும், ஆண்கள் தங்களின் பேண்டின் பின்புறம் உள்ள பாக்கெட்டில் வைப்பதும் தான். 

பணமானது மகாலட்சுமி தாயார் அந்த தாயாரை எப்பொழுதும் நாம் நல்ல முறையில் பேணி பாதுகாக்க வேண்டும். பணத்தை இது போன்ற இடங்களில் வைக்கும் போது நிச்சயம் பணவரவு தடைப்படுவதோடு லட்சுமி கடாட்சம் நம்மை விட்டு நீங்கி விடும். 


 செல்வம் பெருக மார்கழி வெள்ளியில் ஏற்ற வேண்டிய தீபம் எந்த பொருளையும் நாம் எப்படி பேணி பாதுகாக்கிறோமோ அந்த அளவிற்கு அது நம்மிடம் தங்கும். 

அதே போல் தான் பணமும் பணத்தை அலட்சியமாக எண்ணாமல் அதை தாயாரின் சொரூபமாக நினைத்து நல்ல முறையில் பாதுகாத்து பக்குவப்படுத்தினால் நிச்சயம் அது பல மடங்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது. இந்த பதிவில் உள்ள தகவலில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இதையும் நீங்கள் கடைப்பிடித்து பலன் அடையலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.