இலங்கையிலுள்ள அரச திணைக்களங்களில் அரச உத்தியோகத்தர்கள் செய்யும் தவறை இந்த படங்களில் தெளிவு!
இலங்கையிலுள்ள அரச திணைக்களங்களில் அரச உத்தியோகத்தர்கள் செய்யும் தவறை இந்த படங்களில் தெளிவாக காட்டியுள்ளார்கள்.
அதிகமான அரச திணைக்களங்களில் மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு போனால் திணைக்களங்களில் உத்தியோகம் பார்ப்பவர்கள் அதிகமாக போனில் தான் நேரத்தை செலவு செய்கின்றார்கள் யாருடன் கதைக்கிறார்களோ அது தெரியாது எந்த நேரமும் அதிகம் போன் உடன் தான் நேரத்தை செலவிடுகிறார்கள் அதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுப்பதாக இல்லை.
இவர்கள் எடுக்கும் சம்பளம் சாதாரண கூலி வேலை செய்பவர்கள் முதல் நாட்டில் உள்ள அனைவரும் கட்டும்ப வரி பணத்தில் தான் என்பதை இவர்கள் ஞாபகம் இல்லாதவர்கள் போல தங்களை நாடிச் செல்லும் மக்களுக்கு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் ஏதோ தாங்கள் விண்ணில் இருந்து வந்தவர்கள் போல நினைப்பு தங்களிடம் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக போகும் மக்களிடம் சிலர் மதியம் வா அல்லது நாளை வா அப்படி இப்படி என்று சொல்வது இப்படியான உத்தியோகத்தர்களும் இலங்கையில் இருக்கிறார்கள்.
அதிகமான பல்கலைக்கழகங்கள், திணைக்களங்களில் அரசாங்கம் கேமரா பூட்டி சோதனை செய்து பார்த்தால் இவர்கள் வேலை செய்யும் நேரத்தை விட போனில் தான் நேரத்தை செலவு செய்திருப்பார்கள் அதற்காகத்தான் மக்களின் வரிப்பணத்தின் மூலம் சம்பளம் எடுக்கிறார்கள்.
நீங்கள் எடுக்கும் சம்பளத்திற்கு ஏற்றவாறு மனசாட்சியின் படி உங்களிடம் வரும் மக்களுக்கு அவர்களுடைய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து கொடுங்கள்.
போனில் நேரத்தை செலவிடுவதை கைவிடுங்கள் அப்படி உங்களுக்கு கணவனுடன் அல்லது காதலனுடன் வேறு யாருடனாவது கதைப்பதாக இருந்தால் சாப்பிடும் நேரத்தில் அவர்களுடன் கதையுங்கள் அல்லது வீட்டை போய் இரவு நேரம் முழுவதும் அவர்களுடன் நேரத்தை செலவு செய்யுங்கள் அநியாயமாக மக்களின் வரி பணத்தில் சம்பளத்தை எடுத்துக் கொண்டு நேரத்தை அநியாயம் செய்யாதீர்கள் நினைச்சாச்சியின் படி எடுக்கும் சம்பளத்திற்கு ஏற்றவாறு சேவையைச் செய்யுங்கள்.
நன்றி தோழர் Kajan Kajan
கருத்துகள் இல்லை