யாழ் இளைஞர் படுகொலை ; லண்டனில் துயரம். !

 


யாழ்  காரைநகரை பூர்வீகமாக கொண்ட இளைஞர்  படுகொலை ; லண்டனில் துயரம். 


லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இந்த கத்திக்குத்து தாக்குதல் திங்கட்கிழமை இரவு (08-01-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.


இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.