தேசிய தைப் பொங்கல் தினத்தை மாவட்ட செயலாளரினால் மேற்பார்வை!


 ஹட்டன் டம்பார் விளையாட்டரங்கில் தேசிய தைப் பொங்கல் தினத்தை மாவட்ட செயலாளரினால் மேற்பார்வை இடப்பட்டது.

 

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்


 நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட  தேசிய தைப் பொங்கல் தின விழா எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள ஹட்டன் டம்பார் விளையாட்டரங்கில் ஆயத்த நடவடிக்கைகளின் அவதானிப்பு (18) மேற் கொண்டார்.


 ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான முக்கியஸ்தர்களின் பங்கு பற்றுதலுடன் விழாவை ஏற்பாடு செய்தல் மற்றும் அதற்கான உட் கட்டமைப்புகளை உருவாக்குதல் குறித்து மாவட்ட செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.