கசிப்புடன் கைதான முதியவர்..!!
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலீஸ் போதை தடுப்பு பிரிவினருடன் இணைந்து யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது இந்த சுற்றி வளைப்பின் போது 9 லிட்டர் கசிப்புடன் 53 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலீசார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை