20 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை !


இந்தியாவில் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட 20 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ரயில்வே அமைப்பை மின்மயமாக்கும் வகையில், செயலிழந்த 20 டீசல் இயந்திரங்களை வழங்க ரயில்வே பொது மேலாளர் எச். எம். கே. டபிள்யூ. பண்டார தெரிவித்தார்.

அவற்றை இலங்கை ரயில் பாதைகளில் இயக்க முடியுமா என சமீபத்தில் இலங்கை வந்த ரயில்வே துறை நிபுணர்கள் குழுவின் ஆய்வு செய்தனர்.

அதன்படி பெப்ரவரி மாதம் இரண்டு இயந்திரங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.