2024 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய சொல்ல வேண்டிய மந்திரம்


ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் அனைவருக்கும் ஏற்படும் கேள்வி, இந்த வருடம் நமக்கு நன்றாக இருக்குமா என்பது தான். ஒவ்வொரு வருட பிறப்பிலும் ஜாதக ரீதியாகவும் கிரக ரீதியாகவும் சில ராசிகளுக்கு நன்மை பயக்கும் சில ராசிகளுக்கு சில கேடு பலன்கள் இருக்கும். 

அப்படியானால் கெடு ராசி பலன்களை கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற அச்சம் எழும். அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டை குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் அனைத்து ராசிகளுக்கும் நன்மை பயக்கக் கூடிய ஒரு எளிய வழிபாட்டு முறையும் மந்திரம் உபதேச முறையும் பற்றி தான் மந்திரம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். 

2024 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய மந்திர இந்த வருடம் 2024 ஆண்டு சனியின் ஆதிக்கம் உள்ள எட்டாம் எண்ணில் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இதனால் சில பிரச்சனைகள் எழ தான் செய்யும். ஆனால் அதே நேரத்தில் இந்த 2024 நாள் பிறந்திருப்பது திங்கட்கிழமை. இந்த திங்கட்கிழமையானது ஈஸ்வரருக்கு உகந்த நாள். சனீஸ்வரரின் கிரக தேவதையானவர் ஈஸ்வரர். ஆகையால் ஈஸ்வரரை நாம் அடிபணிந்து விட்டால் போதும் சனி பகவானின் தாக்க குறையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இத்துடன் சேர்த்து இந்த வருட முழுவதிலும் நமக்கு நன்மை மட்டுமே ஏற்பட வழிபட வேண்டிய தெய்வத்தை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு முழுவதும் நாம் நல்ல சுபிட்சத்துடன் வாழ அடிபணிய வேண்டியவை கருடாழ்வார். 

இந்த கருடாழ்வாரை அடிபணிந்து அவருடைய காயத்ரி உச்சரித்து வரும் போது நம்முடைய சகல தோஷங்களும் தீய சக்திகளும் நீங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீமைகளை அழித்து நன்மைகளை தருவது இவருக்கு நிகரான தெய்வம் யாரும் இல்லை. 

அதுமட்டுமின்றி பெருமாளையே தாங்கும் தெய்வமான கருட பெருமான் நம் அனைவரின் துன்பத்தையும் தாங்கி இன்பத்தை தருவார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் இந்த வருடத்தில் கருடழ்வார் பணிந்து காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லும் போது நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீரும். 

ஓம் தத்புருஷாய வித்மஹே 
ஸ்வர்ண பட்சாய தீமஹி
 தன்நோ கருட ப்ரஜோதயாத்


 என்ற இந்த மந்திரத்தை தினமும் பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு, விளக்கின் முன் அமர்ந்து மூன்று முறை இந்த மந்திரத்தை சொன்னால் போதும். அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு நல்லதாக அமையும். இதே வழிபாட்டை தினமும் செய்யும் போது நம்முடைய ஒவ்வொரு நாளும் முன்னேற்றமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.