பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்களை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல்!


மத்திய அரசு மற்றும் மாகாண சபையின் கீழுள்ள மத்திய மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படும் விழாக்களை மட்டுப்படுத்துமாறு மாகாண கல்விப் பணிப்பாளரினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.


சில பாடசாலைகளில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதாக கிடைக்கபெற்ற முறைப்பாடுகளையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, சமய விழாக்கள் மற்றும் சுற்றுநிருபத்தினால் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் தவிர்ந்த வேறு ஏதேனும் விழாக்கள் பாடசாலைகளில் நடத்தப்படுமாயின் உரிய பாடசாலைகளின் அதிபர்கள், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் குறித்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.