கோப்பாயில் மரக்காலைஒன்றில் கசிப்புடன் ஒருவர் கைது!


யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி பகுதியில் மரக்காலையில் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு  கீழ் இயங்கும்  யாழ் மாவட்ட  பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த புலனாய்வு பிரிவினருடன் இணைந்து கோப்பாய் பொலிஸாரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பின் போது நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந் பெண் ஒருவர்  10 லிட்டர் கசிப்புடனும்  கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை கோப்பாய்  பொலீசார் முன்னெடுத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.