குடு சலிந்துவுக்குச் சொந்தமான 79 சொகுசு வாகனங்கள்!

 


குடு சலிந்து என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான பாணந்துறை சலிந்து 79 சொகுசு வாகனங்களை வைத்திருப்பதாகவும் அவற்றின் இலக்கத் தகடுகள் மாற்றப்பட்டு  போதைப்பொருள் வலையமைப்பில்  ஈடுபட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

26 வயதுடைய  குடு சலிந்து பல்வேறு நபர்களின் பெயர்களில் 48 வங்கிக் கணக்குகளை பராமரித்து வந்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மூன்றாண்டுகளுக்குள் இந்த நாற்பத்தெட்டு கணக்குகளில் 1,059 மில்லியன் ரூபா பணம் புழக்கத்தில் விடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும்  4,500 பேரின் விபரப் பட்டியல் புலனாய்வுப் பிரிவினராலும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினராலும் தயாரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.