பிரதான வீதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள்!

 


அம்பாறை மாவட்டத்தில், பிரதான வீதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் தீவிரமான முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு – அக்கரைப்பற்று பிரதான வீதி மற்றும் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள்
பாலமுனை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகாமையில் சோதனை செய்யப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கை மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனைக்கமைய, அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.கே பண்டாரவின்
வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தேசப்பிரிய பத்ரன மேற்பார்வையில்
அக்கரைப்பற்று, திருக்கோவில், இறக்காமம், நிந்தவூர், காரைதீவு ஆகிய பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் சோதனை நடவடிக்கையில் இணைந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.