பொங்கு தமிழ் மக்கள் பேரெழுச்சிப் பிரகடணத்தின் 23ஆம் ஆண்டு எழுச்சி நாள்!
தமிழ் மக்களின் அபிலாசைகளை வடகிழக்கு தமிழர் தாயகம் தழுவி தமிழ் மக்கள் ஒன்று திரண்டு 2001 ஆண்டு வெளிப்படுத்திய “பொங்குதமிழ்” மக்கள் பேரெழுச்சிப் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு எழுச்சி நாள் நிகழ்வுகள் 17.01.2024 (புதன்கிழமை) அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினால் நினைவு கூறப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் திரு.கு.துவாரகன் தலைமையில செயலாளர் சோ.சிந்துஜனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில் விரிவுரையாளர் திரு.ம.இளம்பிறையன் அவர்கள் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எழுச்சிநாள் நிகழ்வில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அனைத்துப்பீடங்களினதும் மாணவர் ஒன்றியத் தலைவர்கள், மற்றும் பெருந்திரளான மாணவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாயகம்! தேசியம்! தன்னாட்சியுரிமை!
• யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
#pongutamil #pongutamildeclaration #tamilcollective #rishingtamils #jaffnauniversity #yarlpannamuniversity #universityofjaffna #tamilnation





















.jpeg
)





கருத்துகள் இல்லை