யாழ்.பல்கலை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்!

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. 

பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.