முல்லைத்தீவில் வாகன விபத்து - இளைஞன் பலி!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டா ரக லொறி ஒன்று உழவு இயந்திரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டா ரக லொறியில் பயணித்த புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ரவீன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை