விமான நிலையத்திற்கு எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயிலுடன் கார் மோதியதில் 4 பேர் படுகாயம்.!

 


கொழும்பில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயிலில் கார் ஒன்று மோதியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.



விபத்து இடம்பெற்ற போது காரில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன், நால்வரும் படுகாயமடைந்து சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் குறித்த ரயில் தற்போது கட்டுநாயக்கவை நோக்கி சென்று கொண்டிருந்ததுடன், இந்த விபத்து காரணமாக புத்தளம் பாதையில் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படவில்லையென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.