தலைவிரித்தாடும் அதிகார துஸ்பிரயோகம் - மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவம்!!!
மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் அலுவலகப் பணியாளரை நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் செருப்பு தூக்கவைத்த சம்பவம் நடைபெற்று இரு மாதங்கள் கழிந்த நிலையில். புதிதாக இன்று கடமையை பொறுப்பேற்க வந்த அலுவலக உதவியாளரை சாரி ஏன் கட்டிவந்த என்று கேட்டு அவமானப் படுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்றைய தினம் (17/01/2024) புதிதாக கடமையேற்க வந்த பெண் அலுவலக உதவியாளரை சாரி கட்டி வரக்கூடாது என கூறி மிக மோசமாக ஏசியதால் குறித்த அலுவலக உதவியாளரான பெண், அழுது பணி செய்ய முடியாது என கூறிய சம்பவம் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
தொடர்ச்சியாக அரச உத்தியோகத்தர்கள் மீது அதிகார துஸ்பிரயோகம் செய்வதோடு அலுவலக உதவியாளர்களை அவமானப் படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை