மருத்துவர் ஒருவரால் மைத்துனி கர்ப்பம் - யாழில் இடம்பெற்ற சம்பவம்!!

 


யாழ்ப்பாணத்தில் அரசாங்க வைத்தியராக கடமையாற்றும் மருத்துவர் ஒருவர், வீட்டில் வைத்து மனைவியின் தங்கையான இளம் யுவதிக்கு , சட்டவிரோத கருக்கலைப்பு செய்ய முற்பட்ட நிலையில் , கடுமையான இரத்தப் போக்கு காரணமாக பெண் தற்போது தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில் யாழ் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் 31 வயதான இளம் பெண் ஒருவரே, இவ்வாறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் அரச வைத்தியராக கடமையாற்றும் வைத்தியர், மனைவியுடன் பல தடவைகள் முரண்பட்டு பிரிந்து வாழ்வதும் மீண்டும் சேர்ந்து வாழ்வதுமாக இருந்தவர் என்பதுடன் வைத்தியசாலையில் இரவு நேரப் பணி என மனைவிக்கு தெரிவித்துவிட்டு மனைவியின் தாயுடன் தனித்திருந்த பெண் உத்தியோகத்தரின் வீட்டில் சென்று தங்குபவர் எனவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் கருக்கலைப்பு செய்யப்பட்ட மனைவியின் தங்கையை அவரே தனது வாகனத்தில் கொண்டு வந்து குறித்த தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

குறித்த தனியார் வைத்தியசாலைக்கு வரும் கர்ப்பிணிகளைப் பார்வையிடும் மகப்பேற்று வைத்தியர் ஒருவரின் நண்பரே இந்த செயலை செய்ததாக கூறப்படுகின்றது.

அதோடு வைத்தியசாலையில் அனுமதி எடுக்காமலேயே நேரடியாக சிகிற்சை அறைக்கு யுவதியை கூட்டிச்சென்றதாக தெரிவிக்கபப்டுகின்றது. அவர் அங்கு சென்று சில நிமிடங்களிலேயே மகப்பேற்று நிபுணரும் அங்கு வந்து சிகிச்சை அறைக்குள் நுழைந்துள்ளார்.

அதன் பின்னர் யுவதியை அழைத்து வந்த மருத்துவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரியவருகின்றது. இந்நிலையில் வைத்தியசாலையின் விசேட பிரிவில் யுவதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வைத்தியர் வீட்டில் வைத்தே கருக்கலைப்பை மேற்கொண்ட போது யுவதிக்கு கடும் இரத்தப் போக்கு ஏற்பட்டு சோர்வடைந்ததால், பயத்தின் காரணமாக யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார் .

அதோடு வைத்தியர் கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் கஞ்சா விற்பவர்கள் மற்றும், வாள்வெட்டு காவாலிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுபவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.      


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.