பிரான்சில் தைத்திருநாள் தைப்பொங்கல் விழா இவிறி சூ சென் பிரான்சு!📸

 தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா பிரான்சில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான இவிற சூர் சென் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தால் 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ்ச்சோலை மாணவர்களுடன் கொண்டாடப்பட்டது.

மக்களால் கோலமிட்டு, பொங்கல் பானை வைக்கப்பட்டு, மாணவர்களின் ஆடல், பாடல்களுடன், பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றது. பொங்கலுக்கான அரிசியினை பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர், மற்றும் தமிழ்ச்சோலை நிர்வாகி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் இட்டிருந்தனர். கடும் குளிருக்கு மத்தியிலும் மாணவர்கள் பெற்றோர்கள் தமிழர் கலாசார உடைகளை அணிந்து வந்திருந்தனர். பொங்கல் பற்றிய விளக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.