தொடர்கதையாகும் ஆக்கிரமிப்புக்கள் புதன் கால மாணவர் அரங்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் “தொடர்கதையாகும் ஆக்கிரமிப்புக்கள்”எனும் தலைப்பில் புதன்கால மாணவர் அரங்கு 17.01.2024 (புதன்கிழமை), கலைப்பீட பரீட்சை மண்டபத்தில் நடைபெற்றது.


இவ்வார புதன்கால மாணவர் அரங்கில் "திட்டமிட்ட சிங்கள – பௌத்தமயமாக்கமும் பண்பாட்டு அழிப்பும்" எனும் தலைப்பில் சமூகவியற்துறை மாணவன் திரு.நிதுர்சன் லம்பேட் (துணைத்தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியம்) அவர்களும், "நிலமிழந்தால் பலமிழப்போம்!" எனும் தலைப்பில் சட்டத்துறை மாணவன், திரு.சி.சிவகஜன் (துணைச் செயலாளர், கலைப்பீட மாணவர் ஒன்றியம்) அவர்களும் கருத்துரையாற்றியிருந்தனர்.


ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் புதன்கால மாணவர் அரங்கு, மாணவர்களின்  தனித்திறனை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்ட நிகழ்வுகள், சமூக அரசியல், பொருளாதார விடயப்பரப்புக்கள் தொடர்பான புலமையாளர்களின் கருத்துப்பகிர்வுகள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டமைந்ததாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Arts Faculty Students' Union - University of Jaffna


#wednesday #studentsperformance #artsfaculty #jaffnauniversity #yarlpannamuniversity #universityofjaffna #tamilnation #justice4tamil #rights4tamils #wewantjustice #northeast #tamilgenocide #justice4genocide #ASU #USU #studentsunion #studentlife #StudentsEmpowerment #EndTheOccupation #stop_militarization #EnforcedDisappearances #release_politicalprisoners 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.