யாழில் இப்படியும் துயரம்!!


இரண்டு பாடசாலைகள் கலந்துகொள்ளும் இந்த விவாதத்தின் தலைப்பைக் கொஞ்சம் பாருங்கள். 


ஊடகந்தான் அதர்மம் பண்ணுகிறது என்றால் பாடசாலையும், கல்வி நிருவாகத்தினரும் இந்த விடயத்தில் என்ன செய்கிறார்கள்?


லூசுக்கூட்டம்!


இலங்கைத் தமிழனுக்கு என்று ஒரு மரியாதை உள்ளது. “சினிமாப் பித்தலாட்டங்களைக் கடந்து அவர்கள் தெளிவாக யோசிப்பார்கள்.” என்று இந்தியத் தமிழர்கள் சிலரே என்னிடம் மிகவும் மரியாதையாகச் சொல்லியிருக்கிறார்கள்.


அந்த மரியாதை யுத்தம் பார்த்த தலைமுறையோடு முடிவிற்குவருகிறது என்று நினைக்கிறேன். 


ஊடகப் பைத்தியங்களும் சினிமாப் பைத்தியங்களும் காட்டுகிற கூத்து எங்கு போய் முடியுமோ? 


சினிமாக்காரர்களுக்காக மண்சோறு சாப்பிடலாம்.


கோயில் கட்டலாம்.


அலகு குத்தலாம்.


தூக்குக் காவடி எடுக்கலாம்.


கட்டவுட்டுக்குப் பால்வார்க்கலாம்.


ரசிகர் மன்றங்கள் அமைக்கலாம்.


முகத்தில் பச்சை குத்திக்கொள்ளாலாம்.


இவைகளைச் செய்வதற்கு முதலில் DAN என்கிற மங்குனி ஊடக நிறுவனக்காரர்கள் களத்தில் இறங்கலாம். 


அதனைத் தொடர்ந்து கல்விச் சமூகம் இறங்கி இவற்றைச் செய்யலாம்.


என்னுடைய கருத்து என்னவென்றால்; 


தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும், அளவெட்டி அருணோதயக் கல்லூரியிலும் மூளை என்கிற உறுப்பு இல்லாதவர்கள் அதிபராகவோ, ஆசிரியர்களாகவோ, மாணவர்களாகவோ இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.


தெல்லிப்பழை மற்றும் அளவெட்டி ஆகிய ஊர்களிலாவது ஒரு மூளை உள்ளவன் இல்லையா? பெற்றோருக்கும்கூட அது இல்லையா?


அப்படியானால் ஒன்று செய்யலாம் இந்த விடயத்தை Traffic Policeஇடம் தெளிவாகச்சொல்லி இந்த இரண்டு ஊர்க்காரரும் இனிமேல் helmet அணியத்தேவையில்லை என்று விதி விலக்குப் பெறலாம். 


ஏனென்றால் தலையின் உள்ளே மூளை என்று ஒரு உறுப்பு உள்ளதனாற்தானே தலைக்கவசம் அணியவேண்டும் என்கிறார்கள்.


அடுத்தது யாழ் பல்கலைக்கழகத்தினரும் யாழ்ப்பான ஆஸ்பத்திரியும் ஒரு நாய் பிடிக்கும் வாகனத்தையாவது வாடகைக்கு அமர்த்தி DAN TV என்கிற ஊடகத்தினரை பிடித்துக்கொண்டுபோய் மருந்துசெய்யவும், கடிச்சி வச்சிருவானுகள் கவனமாகக் கையாளவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.