அடியும் நாங்களும்...!!

 


அடி உதவுற மாதிரி யாரும் உதவமாட்டார்கள்... 


நம்மட காலத்தில் நாம் வாங்கிய அடிகளை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் அதில கொஞ்சம் இதோ: 


1. அடி வாங்கி கனநேரம் அழுதால் "இன்னுமா அழுறாய்?"  என்று மறுபடியும் அடி.


2. அடி வாங்கி அழாமல் இருந்தால், *எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கென்று" மறுபடியும் அடி...


3. அடி வாங்காமலேயே அழுதா, "?"நடிக்கிறயா என்று விழும் அடி.


4. பெரியவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில நின்றால் அடி.


5.பெரியவர்கள் நிற்கும்போது இருந்தா அடி.


6. பெரியவர்கள் உட்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தா அடி.


 7. விருந்தாளிகள் வந்தால் சமைத்ததை முன்னதாக சாப்பிட்டா அடி.


8. தட்டில் சாப்பாட்டை போட்டபிறகு சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிச்சால் அடி.


 9. சூரியன் மறைஞ்ச பிறகு வீட்டுக்குப் பிந்தி வந்தால் "எங்க சுத்தீட்டு வாறாய்?" என்று ஒரு அடி.


10. அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு விட்டு வந்தால் அடி.


11. எப்ப பார்த்தாலும் மூஞ்சையை தூக்கி வைச்சுட்டு இருந்தால் அடி.


 12. ரொம்ப துள்ளிக் குதிச்சாலும் அடி. 


13. வயதிற்கு மூத்தவர்களோடு சண்டை போட்டால் அடி.


 14. சின்னப் பிள்ளைகளோடு சண்டை போட்டால் அடி.


 15.ரொம்பவும் மெதுவா சாப்பிட்டாலும் அடி.

 

16.அவசர அவசரமா அள்ளி போட்டுச் சாப்பிட்டாலும் அடி. 


17. காணாததை கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி.


 18. தட்டில போட்டதை முழுக்க சாப்பிடாம இருந்தால் அடி.


19.சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டீட்டு இருந்தால் அடி,

 

20. கதைத்துக்கொண்டு சாப்பிட்டால் அடி.


21.காலை எழும்பி படிக்காட்டி அடி. 


22.விருந்தாளிகள் சாப்பிடுவதை ஆவென்று பார்த்தால் அடி. 


23. தடுமாறி நடந்து விழுந்தா அடி.


24. பெரியவர்களை முறைச்சுப் பார்த்தால் அடி.


25. பெரியவர்கள் பேசும்போது முழிச்சா அடி.


26. அவர்கள் பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி.


27. பெண்களை ஓரக் கண்ணால பார்த்தால் அடி.


28. நண்பர்களோடு தெருவில் விளையாடினால்  அடி.


 29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்மென்று வீட்ல உட்க்கார்ந்திருந்தாலும் அடி.


 30. சாப்பிட்ட பின், தட்டை கழுவேல்லை என்றால் அடி.


 31. சாப்பிட்ட தட்டை ஒழுங்கா கழுவாட்டி அடி.


 32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டால் அடி.


 33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்காட்டி அடி.


34.நகத்தைக் கடிச்சா அடி.


 34..குளிக்காட்டி அடி. 


35.காக்கா குளி குளிச்சு உடனே வந்தா முதுகுல ஒரு அடி.


36. கனநேரம் குளிச்சாலும் அடி.


 37. பள்ளிக்கூடத்தில  செய்யுறது தெரிஞ்சா வீட்ல அடி.


 38.தெருவில் போற நாய் கடிச்சாலும் அடி. 


39. சைக்கிள்ள விழுந்து கால் கை தேச்சாலும் அடி.


 40. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லேல்லை என்றாலும் அடி.


41.  பேசும்போது குறுக்க பேசினாலும் அடி.


 42 கோவிலுக்கு நேரத்திற்கு போகாட்டி அடி.


 43.  நண்பர்களோடு கடையில போய் சாப்பிட்டால் அடி.


44.அம்மா அப்பா வாங்கின உடுப்பு பிடிக்கல என்று சொன்னா அடி.


45. கடையில போய் உடுப்பெடுக்க  நேரம் போனால் இதுக்கு இவளவு நேரமா என்று அடி.


46. வாத்தியார் வயல் விதைக்கப் போட்டு வகுப்பெடுக்காமல் விட்டிட்டு சோதனை வைத்து மதிப்பெண் குறைய அதற்கு அடி.


47. பெட்டையளுக்கு பின்னால சுத்தினால் அடி.


48. பெட்டை நம்மை சுத்தினாலும் அடி.


49. எந்த வேலையையும் நேர்த்தியாக செய்யாவிட்டால் அடி. 

50. இங்கிலீசு தெரியாட்டி இழுத்து இரண்டு அடி.


அந்த நாளில  என்னா அடி!!


நம்மட பிள்ளைகள் எவளவு கொடுத்து வைத்ததுகள். நான் என் மகனுக்கு இதுவரை அடித்தது இல்லை அன்பு என்ற ஒன்றே நான் பாவிக்கும் ஆயுதம். என் மகன் என்னை அடிக்கும் நிலைக்கும் வைத்ததும் இல்லை.


 அப்ப எல்லாம் வீட்டில அடி ...அடி... அடிதான்.. எல்லாத்துக்கும் அடிதான். 

இப்ப வீட்டில எல்லாத்துக்கும் சரி சரி..


இத்தனை அடி வாங்கியும் “ அடியாத மாடு படியாது” என்று அடிக்கடி செல்வார்கள். 

அந்த அடிகள் தான் 

அறிவு

ஒழுக்கம்

நற்பண்பு 

இவைகளைக் கற்றுத்தந்தது என்றால் மிகையல்லை.


தவா = கனடா. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.