வரலாற்றில் இன்று_JAN_05.!


1900 அயர்லாந்து தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.*


*1905 – யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.*


*1918 – செருமன் தொழிலாளர் கட்சி அமைக்கப்பட்டது.*


*1933 – கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.*


*1940 – பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.*


*1945 – போலந்தின் புதிய சோவியத்-சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.*


*1950 – சோவியத் ஒன்றியத்தில் சிவெர்திலோவ்சுக் நகரில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த சோவியத் வான் படையின் தேசிய பனி வளைதடியாட்டக் குழுவின் அனைத்து உறுப்பினர்கள் உட்பட அனைத்து 19 பேரும் உயிரிழந்தனர்.*


*1967 – இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.*


*1970 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் 7.1 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,000–15,000 வரையானோர் உயிரிழந்தனர். 26,000 பேர் காயமடைந்தனர்.*


*1971 – உலகின் முதல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி ஆத்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.*


*1972 – விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.

1974 – பெருவின் தலைநகரான லிமாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.* *6 பேர் உயிரிழந்தனர்.*


*1975 – ஆத்திரேலியா, தாசுமேனியாவில் தாசுமான் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.*


*1976 – கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.*


*1984 – ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.*


*1991 – சியார்சியப் படைகள் தெற்கு ஒசேத்தியாவின் தலைநகர் திஸ்கின்வாலியில் தரையிறங்கின.*


*1991–92 Sதெற்கு ஒசேத்தியப் போர் ஆரம்பமானது.*


*1997 – உருசியப் படைகள் செச்சினியாவில் இருந்து வெளியேறின.*


*2000 – ஈழப்போர்: இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.*


*2005 – சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள் ஏரிசு கண்டுபிடிக்கப்பட்டது.*


*2007 – ஈழப்போர்: கொழும்பிலிருந்து 36 கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.*


*2014 – இந்திய கடுங்குளிர் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட ஜிசாட்-14 தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.*

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.