பிரித்தானிய நாடாளுமன்றில் இராவணன் நாடகம்!!

 


தமிழ் மரபுத் திங்களை சிறப்பிக்கும் முகமாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் 15.01.2024 திங்கட்கிழமை நடந்த தமிழர் திருவிழாவாம் தைப் பொங்கல் விழாவில் இராவணன் பெருமை சொல்லும் ஈழநாட்டியம் அரங்கேறியது.

எல்லோரும் இராமனைப் பற்றிப் பேசும் இந்த நாட்களில் இராவணன் பெருமை சொல்லும் ஈழநாட்டியம் நம்மவர் நடனமாய் "நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் " என நம் கலாசார அடையாளமாய் அரங்கேறியமை நம் இலக்கு நோக்கிய பயணத்தில் வரலாற்றில் தடம் பதித்த நிகழ்வாய் அமைந்தது.

லண்டனில் நடன ஆசிரியையாய் பணி செய்யும் ரகுப்பிரியாவும் அவர் மாணவர்கள் இருவரும் இந்த நிகழ்வில் நம் ஈழநாட்டியத்தை அரங்கேற்றியிருந்தனர்.பேராசிரியர் விதியானந்தன் நூற்றாண்டில் அவரது கூத்து மீளுருவாக்க மரபில் பேராசிரியர் சி.மெளனகுரு வழியாக வந்த எனது வழிகாட்டலில் உருவான இந்த நிகழ்வு நடன ஆசிரியை ரகுப்பிரியா பதிவிட்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.