குற்றச்செயல்கள் 17 % வீதத்தால் குறைந்துள்ளது!

 


பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ள  யுக்திய நடவடிக்கையினால்  நாட்டில் குற்றச்செயல்கள் 17 % வீதத்தால் குறைந்துள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அளஸ் குறிப்பிட்டார்.


இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் யுக்திய விசேட சுற்றிவளைப்புக்கு எதிராக மக்கள் போராடவில்லை எனவும் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, யுக்திய செயற்திட்டத்தினால் இலங்கையில் தற்போது 17 வீதமளவில் சமூக விரோத செயற்பாடுகள் குறைவடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.