ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி!

 


ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துவருவதாக ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்த கோரப்பட்ட நிதி வரவு – செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்
குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும், நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.