குறையும் நீர்க்கட்டணம்!!


குறைக்கப்படவுள்ள மின்சாரக் கட்டணத்துடன், நீர்  கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (11) விடுத்துள்ள அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுக்கு அதிகூடிய நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இனிமேல் நீர்  கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாங்கள் செயல்படவில்லை.

தண்ணீரை சுத்திகரிக்க தேவையான முக்கிய காரணிகளில் மின்சாரம் ஒன்று. எனவே மின் கட்டணம் குறைக்கப்பட்டால் கண்டிப்பாக நாங்கள் நீர்க் கட்டணத்தை குறைப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.