பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல் !


சிவில் உடையில் போக்குவரத்துச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.நாரம்மலை பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.சம்பவத்தில் உயிரிழந்த 41 வயதுடைய ரொஷான் குமாரதிலக்கவின் வீட்டிற்கு நிவாரணம் வழங்குவதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் இன்று காலை குறித்த இடத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.