வரலாற்றில் இன்று_________


1919 – புரட்சிகர ஐரிசு நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு அயர்லாந்துக் குடியரசு அறிவிக்கப்பட்டது.


*1924 – சோவியத் தலைவர் விளாதிமிர் லெனின் இறந்தார்.*


*1925 – அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.*


*1941 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலிய, பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.*


*1947 – முதலாவது சிங்களத் திரைப்படம் கடவுனு பொறந்துவ இலங்கையில் திரையிடப்பட்டது.*


*1948 – கியூபெக்கின் தேசியக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டு முதற்தடவையாக அதன் தேசியப் பேரவையில் பறக்க விடப்பட்டது.*


*1954 – உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், நோட்டிலசு, அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.*


*1960 – ஜமேக்காவில் அவியாங்கா விமானம் வீழ்ந்து தீப்பிடித்ததில் 37 பேர் உயிரிழந்தனர்.*


*1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.*


*1960 – தென்னாப்பிரிக்காவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 435 தொழிலாளர்கள் உயிருடன் புதையுண்டனர்.*


*1968 – பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் குண்டுவீச்சு விமானம் ஒன்று அமெரிக்காவின் தூலே வான் தளத்தில் மோதியதில், அப்பகுதி முழுவதும் அணுக் கதிர்வீச்சினால் பாதிப்படைந்தது.*


*1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.*


*1976 – கான்கோர்டு விமானம் தனது முதலாவது வணிக சேவையை இலண்டன்-பகுரைன், பாரிசு-ரியோ வழியாக ஆரம்பித்தது.*


*1995 – கொழும்பில் யோசப் வாசு அடிகளுக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அருளாளர் பட்டம் வழங்கினார்.*


*2003 – 7.6 அளவு நிலநடுக்கம் மெக்சிக்கோவின் கொலிமா மாநிலத்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.*


*2004 – நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இசுபிரிட் தளவுலவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.*


*2008 – அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசிப் பழங்குடி இறந்தார்.*


*2009 – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது.*


*2009 – காசாக்கரையில் இருந்து இசுரேல் அதிகாரபூர்வமாக வெளியேறியது.*


*2011 – அல்பேனியா, டிரானாவில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்தனர்.*


*2017 – ஆந்திரப் பிரதேசம், விஜயநகரம், கூனேருவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 42 பேர் உயிரிழந்தனர், 68 பேர் காயமடைந்தனர்.*


*2017 – அமெரிக்க அரசுத் தலைவராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் அமெரிக்காவின் 400 இற்கும் அதிகமான நகரங்களிலும், 160 இற்கும் மேற்பட்ட நாடுகளிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.*

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.