பணம் சேர தை ஏகாதசி!!


தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம் முன்னோர் வாக்கு ஒரு நாளும் பொய்யாகாது. அதற்கு ஏற்றார் போல தை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாட்களிலும் நாம் செய்யக்கூடிய பூஜைகள் நமக்கு நல்லதொரு வழியை காட்டும். அந்த வகையில் தை முதல் நாளிலிருந்து ஒவ்வொரு விசேஷங்களாக தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. 


அதை தொடர்ந்து நாளை கை ஏகாதசி முருகருக்கு எப்படி சஷ்டி திதி, கிருத்திகை விசேஷமானது அதே போல பெருமாளுக்கு ஏகாதசி திதி மிகவும் விசேஷமானது. நாளைய தினத்தில் பெருமாளை நாம் செய்யும் இந்த சிறு வழிபாடு ஆனது நமக்கு பெரும் செல்வத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை  குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். 


செல்வம் பெருக கை ஏகாதசி வழிபாடு 


நாளைய தினம் தை ஏகாதசி மில் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அப்படி பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் நேரம் தான் இதில் மிகவும் முக்கியமானது அது எந்த நேரம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 


காலை 7 லிருந்து 8 சுக்கிர ஹோரையில் செல்ல வேண்டும். அடுத்து 8 இருந்து 9 புதன் ஹேரை. இதை தவிர்த்தால் 11 மணியிலிருந்து 12 புதன் ஹோரை இந்த நேரத்தில் செல்ல வேண்டும். இந்த நேரங்கள் அனைத்தையும் தவற விட்டாலும் நாளை மாலை ஆறிலிருந்து ஏழு புதன் ஹோரையில் சென்று விடுங்கள். புதன் கிரகத்தின் அதிபதி தெய்வம் தான் பெருமாள். ஆகையால் நாளைய தினம் இந்த ஹோரையில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு வாய்ந்தது.


 அப்படி பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் போது கையில் சிகப்பு நிற மலரை கொண்டு செல்லுங்கள். அந்த மலரால் பெருமாளுக்கு அர்ச்சனையோ அல்லது மலரை மாலையாக சாற்றி அவரை வழிபட வேண்டும். அத்துடன் ஒரு நெய் தீபம் ஏற்றி பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இது கோவிலில் செய்ய வேண்டிய வழிபாடு. 


வீட்டில் பெருமாள் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த சங்கு கோமதி சக்கரம் போன்ற தெய்வம்சம் பொருந்திய பொருட்கள் வைத்திருந்தால் அவற்றிற்கு நாளை இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் துளசி தீர்த்தத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். அத்துடன் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பெருமாளின் பரிபூரண அருளைப் பெறலாம். 

நாளைய தினத்தில் நீங்கள் செய்யக் கூடிய இந்த ஒரு எளிய வழிபாடு உங்களின் பொருளாதார நிலையில் நல்ல நிலையில் உயர்த்தக்கூடிய யோகத்தை பெறலாம் இந்த வழிபாடு முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

#Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.