முறையான விசாரணை நடத்த வேண்டுமெனவும் சனத் நிஷாந்தவின் மனைவி!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த காருடன் மோதி விபத்துக்குள்ளான கொள்கலன் வாகன சாரதி இன்று (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளித்துள்ளார்.
அதன்படி, குறித்த கொள்கலன் வாகனத்தின் சாரதி நாரஹேன்பிட்டியிலுள்ள குறித்த விசாரணைப் பிரிவுக்குச் சென்று 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிக்கு மரணத்தை ஏற்படுத்திய விபத்து குறித்து சந்தேகம் உள்ளதாகவும் அது தொடர்பான முறையான விசாரணை நடத்த வேண்டுமெனவும் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்திருந்தமை குறிப்பிடத்த்தக்கது.
கருத்துகள் இல்லை