பெண்களுக்கும் கட்டாயமாகும் இராணுவ சேவை!
மியான்மாரில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் இராணுவ சேவை கட்டாயமாகிறது.
மியன்மாரில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 18 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து ஆண்களும், 18 முதல் 27 வயதுக்கு இடைப்பட்ட இளம் பெண்களும் குறைந்தபட்சம் 02 வருடங்கள் இராணுவ கட்டளையின் கீழ் கடமையாற்ற வேண்டும்.
இராணுவம் 2021 இல் ஆட்சியைக் கைப்பற்றியது, ஆனால் போராளிகள் மற்றும் இராணுவ எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுடனான சமீபத்திய போர்களில் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை