காக்கை- காப்பவர்கள்!

 


காக்கை,  அண்டங்காக்கை இரண்டும் என் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். 


என் ஊரில் உள்ள வீட்டின் பின் வாசலில் எங்கள் காதல் துவங்கியது. இவர்கள் இருவருக்குமே உணவு மட்டும்தான் முக்கியம். நேரம் தவறாமை இவர்களின் முக்கிய பண்பு. 


என்னிடம் என் வாழ்நாளில் முதலில் நெருங்கிய பறவை காக்கை மட்டுமே. என் கைகளில் அமர்ந்து உணவைக் கொத்தித் தின்ற முதல் பறவை அதுதான். 


தான் குஞ்சி பொறித்துவிட்டால் நம்மையே நெருங்கவிடாது. தலையில் அடிக்கும். வேகமாக கரையும். தன் குஞ்சுகள் மேல் அவ்ளோ அன்பு. காகம் ஒரு அற்புதப் பறவை நாம் அதன் நிறத்திற்காக வெறுத்தாலும்.  


காகம் மிக அதிபுத்திசாலி. அதன் நிறத்திற்காக நாம் அதை வெறுத்தாலும்.


நாம் நண்பரா எதிராளியா என்பது அவசியமே இல்லை. உணவுக்காக இவர்கள் இறந்து போவதும் உண்டு. 


யாரோட குழந்தையா இருந்தாலும் தன் குழந்தையா நினைச்சி ஊட்டி வளர்க்கும் பெருந்தகையோர்கள். 


காக்கை- காப்பவர்கள்

அண்டங்காக்கை- அண்டத்தைக் காப்பவர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன். 


ஆங்கிலத்தில் கிளீனர்ஸ் என்று சொல்லுவோம். இந்த அண்டத்தை அல்லது இறந்த சிறு உயிரிகளைத் தின்று சுத்தம் செய்கிற ஒரு அற்புதமான பறவை காக்கை. 


எனக்கு மிகவும் பிடித்த பறவை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.