தன்னைக் கவனிப்பாரில்லை" என்ப மேகமிடும்
எல்லா வலைப்பின்னல்
சூழலும் அச் சிறு வெள்ளைப் பறவையை
பின்னிக் கொள்ளும்.
அதன் அழகு
அதன் பெருத்த வேலை
குட்டி அளவு
சுதந்திரம்
தன்னிச்சை யாவற்றையும் குறிவைக்கின்றன சூழ் பறவைகள்.
போட்டிகள்
பொறாமை அலைகளும்
அதன் அலைவரிசையில்
கடும் சிதைவைப் பிறப்பிக்கின்றன.
தனக்காக
பிறருக்காக
எதிர்காலத்திற்கானவை
என அதன் வலைப்பின்னல்
ஏராளம்.
எல்லாவற்றைக்காகவும் அக்குட்டி
தன்னைப் படுத்திக் கொள்கிறது.
உறக்கம் இழக்கிறது.
தன்னை மேலும் மேலும்
வதைக்கிறது.
"தன்னைக் கவனிப்பாரில்லை" என்ப மேகமிடும்
தன்னிரக்கத்தைக்கூடத்
தணிக்க இயல்வதில்லை அதால்.
அச்சிறு குருவியின்
அடைபடலுக்குள்ளே பல
ஆயிரம் போராட்டங்கள்.
மீள்தலின் ஒரு சிறு சிலிர்ப்பாய்,
அது தன்னைத் தானே அழகுப்படுத்திக் கொள்தலே,
தன் சிறகைத் தானே விரித்துக் கொள்தலே,
தன் இயல்பைத் தேடிக் கொள்வதிலே
உறக்கம் என்ற பெயரில் ஓய்வு கொள்வதிலே
இருக்கிறது
இவ்வெளியுலகத் தடுப்புச் சுவர்.
.
தலைக்குள்ளிரும் தலையாய அச்சிறு வெள்ளைப் பறவையை பத்திரமாக்கலே
நாளை தன்னிலை இழக்காதிருக்கச் செய்யும் மா மந்திரம்😍
#saveurbrain
கருத்துகள் இல்லை