15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!


யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 15 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த 46 வயதுடையவரே யாழ் நகரில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார், கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்தப்படவுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.