770 பேர் சந்தேகத்தில் கைது!


நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது 770 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 567 சந்தேக நபர்களில் 06 சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

 பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 05 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவர்களிடம் இருந்து 132 கிராம் ஹெரோயின், 121 கிராம் ஐஸ் பொதைபொருள், 15 கிலோ 900 கிராம் கஞ்சா, 5,416 கஞ்சா செடிகள், 209 கிராம் மாவா, 128 கிராம் மதனமோதக மாத்திரைகள் மற்றும் 45 கிராம் தூள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.