இரு பொலிஸார் கைது!
10,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை, யதவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டிருந்த முறைப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிளின் அனுமதிப்பத்திரம் காலாவதியானமைக்காகவும், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமைக்காகவும் சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும், பின்னர் அது 50,000 ரூபாவாக குறைக்கப்பட்டு,10,000 ரூபாவை பெற்றுக்கொண்ட போதே பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கருத்துகள் இல்லை