சந்திரகாந்தனினால் புதிய வீதிகள் திறந்து வைப்பு!


 கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களினால் புதிய வீதிகள் மக்கள் பாவனைக்காக இன்று(03) திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கா. சித்திரவேல் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மணல் வீதிகள் அற்ற கிராமங்கள் எனும் வேலைத்திட்டத்தினுடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக பல வீதிகள் புனர்நிர்மானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  செட்டியார் குடியிருப்பு வீதி, பாரதி வீதி, வீட்டுத்திட்ட 1ம் குறுக்கு வீதி, நெல்லுச்சேனை 1ம் குறுக்கு வீதி ஆகிய வீதிகள்; கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்  புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.