எலும்பு கவ்விகள் துணை நிற்க சுதந்திரக் கொடி.!!
நமோ நமோ நமோ தாயே.
முள்ளிவாய்க்கால் ஒப்பாரி ஓலங்களை
தேசிய கீதமாக்கி இசைத்தபடி
ஏறுகிறது சிங்களச் சுதந்திரக் கொடி.
முடிந்து போகாத நிலப்பறிப்பின்
அதிகாரப் பூதங்கள் நிற்கும் திசையில்
ஏறுகிறது சிங்களச் சுதந்திரக் கொடி.
காணாமல் போனோரைத் தேடும் நீதியை
காலால் மிதித்துப் புன்னகைத்தபடி
ஏறுகிறது சிங்களச் சுதந்திரக் கொடி.
எலும்பு கவ்விகள் துணை நிற்க
கொலை வெறிக் குணம் கொண்டு
ஏறுகிறது சிங்களச் சுதந்திரக் கொடி.
உணர்வு கொள் ஆயுளைப் புதைத்து
உறவுகளைச் சிறைகளுக்குள் சிதைத்து
ஏறுகிறது சிங்களச் சுதந்திரக் கொடி.
தமிழரைப் புதைத்த மேடையில்
தம்பதீபக் போட்பாடு பேசிய படி
ஏறுகிறது சிங்களச் சுதந்திரக் கொடி.
கலைப்பரிதி.
கருத்துகள் இல்லை