போர் இன்னும் ஒயவில்லை!!


ஓசையின்றிப் போர் நடக்கிறது

தமிழர் நிலங்கள்

மெல்லப் பறிபோகிறது

காலங்கள் நீழ்கிறது

எங்கள் கனவுகளும்

களவாடப் படுகிறது

புத்தனின் பெயரால் மொத்த இடமும்

விழுங்கப்படுகிறது

கூச்சலிடுவதால் சிங்களத்தின் காதில்

எதுவும் விழாது

குழறித் திரிவதால் -உலகின் 

கண்களும் திறவாது

தமிழர் படை

அணியாக நடந்தபோது

பன்நாடுகழும்

பட்டுக் கம்பளம் விரித்தன

இன்றைய எங்கள் அரசியல் பேச்சும்

ஊர்வலப் போக்கும்

சிங்களற்கு பொழுது போக்கு

பானை இல்லா அடுப்பை

சும்மா எரிப்பது போன்று

 சோறு இல்லாப் பானையை

 தொடர்ந்து துலாவுவது போன்று

 இருக்கிறது எங்கள் அரசியல்

 விட்டுவிடு தமிழா வெற்று அரசியலை

 உன் கால்கள் வலிமையானவை

 உன் தோள்கள் திடமானவை

 உன் பாதைகள் தெளிவானவை

 உன் பயணங்கள் உயர்வானவை

 வலிகள் நிறைந்த எங்கள் வாழ்க்கையில்

 எளிய அரசியல் எதுவும் செய்துவிடாது

 அரசியல் பேசி எந்த இனமும்

 விடுதலை பெற்றதாக வரலாறுகள் இல்லை

 சிங்கத்திடம் கருணையை

 மான்கள் எதிர்பார்க்கக் கூடாது

 சிங்கள இனம்

 புத்தளின் பெயரால்

 எங்கள் மொத்த ஊர்களையும்

 விழுங்கி ஏப்பமிட முன்னர்

 தமிழ் படை திரட்டு பகை விரட்டு

 தொடர்ந்து செல் போர் செய்.

 நீரின்றிப் பயிர்கள் செழிக்காது

 போறின்றி நிலங்கள் வெளிக்காது

 ஆதலால் போர் செய் தமிழா

 வந்தபடை ஓடும்

 வரலாறு எமதாகும்.

சி. செ. புலிக்குட்டி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.