கொண்டைக்கடலை குழம்பு !


தேவையான பொருள்கள் -


கொண்டைக்கடலை - 1/2 கப்

தக்காளி - 1

மட்டன் மசாலா பொடி - ( நான் தயார் பண்ணியது ) 2 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மல்லித்தழை - சிறிது


அரைக்க -

தேங்காய் துருவல் - 1/2 கப்

 முந்திரிப்பருப்பு - 6

தாளிக்க -

நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

பட்டை - 1 இன்ச் அளவு

கிராம்பு - 2

 நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கப்

கறிவேப்பிலை - சிறிது


செய்முறை -

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும்.

தக்காளி. வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி கொள்ளவும்.


தேங்காய், முந்திரிப்பருப்பு  சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.


அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும் பட்டை பொன்னிறமானதும் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்,

வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மட்டன் மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் 1/12 கப் தண்ணீர், அவித்த கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.


மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.


குழம்பு கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான கொண்டைக்கடலை குழம்பு ரெடி !

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.