காணாமல்போன சிறுமி தொலைபேசிய அழைப்பு!

 


காசாவில் காணாமல்போன ஆறு வயது சிறுமி உயிருக்காக மன்றாடும் ஓடியோ பதிவு வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட தனது ஆறு குடும்ப உறுப்பினர்களுடன் கார் வண்டி ஒன்றில் சிக்கிய ஹிந்த் ரஜப் என்ற அந்த சிறுமி, தொலைபேசியில் அழைத்து தன்னை காப்பற்றும்படி கேட்டுள்ளார். பலஸ்தீன செம்பிறை சங்க அவசர பிரிவை அழைத்த அந்த சிறுமி,


“டாங்கி எனக்கு அருகில் உள்ளது. அது நகர்ந்து வருகிறது. என்னை வந்து காப்பாற்ற முடியுமா? எனக்கு பயமாக இருக்கிறது” என்று குறிப்பிடுவது பதிவாகியுள்ளது. கடந்த ஜனவரி 29 ஆம் திகதி தான் சென்ற கார் வண்டி இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்கானதில் அந்த சிறுமியின் மாமனார், அவரது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.


இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு இலக்காகி வரும் வடக்கு காசாவில் காணாமல்போன அந்த சிறுமியை தேடும் முயற்சியில் செம்பிறை சங்க உறுப்பினர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


சிறுமியின் தாய் விசாம் ஹமதா, தனது மகளுக்காக மருத்துவமனையில் காத்திருப்பதாக சி.என்.என். தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.