பெப்ரவரி 10இல்சிட்டி லீக் யூசுப் கிண்ண தொடர்!

 


இளம் கால்பந்து வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் சிட்டி கால்பந்து லீக் மூன்றாவது முறையாகவும் நடத்தும் ‘யூசுப் கிண்ண கால்பந்து’ தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


பதினாறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் சம்பியனாகும் இளம் அணிக்கு ஒன்றரை இலட்சம் ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ஒரு இலட்சம் ரூபாவும் பணப் பரிசாக வழங்கப்படவுள்ளது.


வார இறுதியில் போட்டிகள் நடைபெறவிருப்பதோடு இறுதிச் சுற்று மார்ச் மாத ஆரம்ப வாரத்திலும் இறுதிப் போட்டி 10 ஆம் திகதியும் நடைபெறும். இதில் சோண்டர்ஸ், ப்ளக்ஸ்வெயார், கொழும்பு கால்பந்து கழகம், ரினோன், கொள்ளுப்பிட்டி யுனைடெட், ஜாவாலேன், வெள்ளவத்தை யங் சில்வர், கொழும்பு சிட்டி கால்பந்து கழகம், மாளிகாவத்தை யூத், கொம்பனித்தெரு விக்டரி, மொரகஸ்முல்ல விளையாட்டுக் கழகம் மற்றும் வெள்ளவத்தை குரே ஆகிய அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.