வவுனியா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

 


வவுனியா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிருபத்திற்கமைவாக பல்கலைக்கழகப் பேரவையின் பதவி வழிச் செயலரான பதிவாளரால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஆர்வமுடையவர்கள் தமது விண்ணப்பங்களை இம் மாதம் 21 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணிக்கு முன்னராகப் பல்கலைக்கழகப் பதிவாளருக்குக் கிடைக்கக் கூடியவாறு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் எனவும், விண்ணப்பம் மற்றும் ஆவணங்களின் மென்பிரதி பதிவாளரது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.